மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவையொட்டி 2-வது நாளாக கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின + "||" + Karunanidhi enclosure stores shut down for 2nd day The roads did not run because the bus did not run

கருணாநிதி மறைவையொட்டி 2-வது நாளாக கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின

கருணாநிதி மறைவையொட்டி 2-வது நாளாக கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின
கருணாநிதி மறைவையொட்டி திருச்சியில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.
திருச்சி,

தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி பரவியதுமே தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி நகரம் பெரும் சோகத்தில் மூழ்கியது. நேற்று முன்தினம் இரவே திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் இந்த இரு பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டன.

2-வது நாளாக நேற்றும் திருச்சி நகரில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த என்.எஸ்.பி. சாலை, பெரிய கடைவீதி, மேலப்புலிவார்டு சாலை, பாலக்கரை மெயின் சாலை, தில்லைநகர், உறையூர் சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று கொண்டிருந்தன.

திருச்சி காந்திமார்க்கெட்டில் பூக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன. மற்ற படி அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபார கடைகள் மூடப்பட்டு இருந்தன. காய்கறி வியாபாரிகள் சிலர் தரைக்கடைகளை திறந்து வைத்து இருந்தனர். அவற்றை மூடும்படி தி.மு.க.வினர் கேட்டுக்கொண்டதால் அந்த கடைகளும் மூடப்பட்டன. ஓட்டல்கள், டிபன் கடைகள், டீ கடைகள், பெட்டி கடைகளும் மூடப்பட்டு இருந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதாலும், கடைகள் மூடப்பட்டு இருந்ததாலும், வெறிச்சோடிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டதாலும் திருச்சி நகரம் நேற்று காலையில் இருந்து மாலை வரை அறிவிக்கப்படாத முழு அடைப்பு கண்ட நகரமாக மாறியது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், திருச்சி விமான நிலையம் ஆகிய இடங்களில் ஏற்றப்பட்டு இருந்த தேசிய கொடிகள் நேற்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. திருச்சி நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் நேற்று காலை முதல் மூடப்பட்டு இருந்தன.