மாவட்ட செய்திகள்

காட்கோபர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது, 16 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார் + "||" + The main culprit in the Ghatkopar bomb blast case, After 16 years he was trapped

காட்கோபர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது, 16 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

காட்கோபர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது, 16 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
மும்பை காட்கோபர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி 16 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை காட்கோபரில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி பெஸ்ட் பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர். ேமலும் 50 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவுரங்காபாத்தை சேர்ந்த யாக்யா அப்துல் ரகுமான் சேக் (வயது45) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. குண்டு வெடிப்புக்கு பின்னர் அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார்.

இந்த நிலையில், அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவுரங்காபாத் திரும்பினார். இதுபற்றி குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த மாநில போலீசார் அவுரங்காபாத்தில் வைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக மராட்டிய தீவிரவாத தடுப்பு படை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் 16 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிகம் வாசிக்கப்பட்டவை