மாவட்ட செய்திகள்

காருக்கு வழிவிடாததால் தகராறு வாலிபர் மீது தாக்குதல் - 3 பேர் கைது + "||" + The attack on a young man attacked the car - 3 people arrested

காருக்கு வழிவிடாததால் தகராறு வாலிபர் மீது தாக்குதல் - 3 பேர் கைது

காருக்கு வழிவிடாததால் தகராறு வாலிபர் மீது தாக்குதல் - 3 பேர் கைது
காருக்கு வழிவிடாததால் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்,

நாகூர் அருகே கங்காளஞ்சேரி கடைத்தெருவில் சம்பவத்தன்று 3 பேர் நின்று கொண்டு தகராறு செய்து கொண்டு இருப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், திருவாரூர் மாவட்டம் செல்லபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சண்முகவேல் என்பவர் அவர் ஓட்டி வந்த காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் மற்றொரு காரில் வந்த திருவாரூர் துர்க்காளை ரோட்டை சேர்ந்த பாலமுருகன் மகன் ஹரிஹரன் (வயது 22). கந்தன் மகன் ஹரிபாலாஜி (20). காட்டூர் பகுதியை சேர்ந்த துரைபாண்டியன் மகன் சிவகிருஷ்ணன் (22). ஆகிய 3 பேரும் காருக்கு வழிவிடுமாறு சண்முகவேலிடம் கூறியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சண்முகவேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. தெரிய வந்தது.

இதில் காயம் அடைந்த சண்முகவேல் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரிஹரன், ஹரிபாலாஜி, சிவகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.