மாவட்ட செய்திகள்

நெல்லை டவுனில்பெண் தீக்குளித்து சாவுதற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 2 பேர் கைது + "||" + In Nelli Town The girl was burned and killed

நெல்லை டவுனில்பெண் தீக்குளித்து சாவுதற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 2 பேர் கைது

நெல்லை டவுனில்பெண் தீக்குளித்து சாவுதற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 2 பேர் கைது
நெல்லை டவுனில் தீக்குளித்து பெண் இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, 

நெல்லை டவுனில் தீக்குளித்து பெண் இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் தீக்குளித்து சாவு

நெல்லை டவுன் கன்னியாகுடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவரது மனைவி விமலா (22). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. விமலா, குடும்ப பிரச்சினையின் காரணமாக நேற்று முன்தினம் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் உடலில் பற்றி எரிந்த தீயை அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்து சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விமலா பரிதாபமாக இறந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமலாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் மணிகண்டன், தம்பி முத்துசெல்வம் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.