மாவட்ட செய்திகள்

ஓராண்டு காலம் பறக்கும் ஆளில்லா விமானம்! + "||" + A year-long flying drone

ஓராண்டு காலம் பறக்கும் ஆளில்லா விமானம்!

ஓராண்டு காலம் பறக்கும் ஆளில்லா விமானம்!
மின்சாரம், எந்திரம் என எவ்வித உதவியும் இல்லாமல் தொடர்ந்து ஓராண்டு காலம் வானில் பறக்கும் ஆளில்லா விமானம் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற பர்ன்பாரூவ் சர்வதேச விமானக் கண் காட்சியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அவற்றில், எவ்வித உதவியும் இல்லாமல் தொடர்ந்து ஓராண்டு காலத்துக்குப் பறக்கும் ஆளில்லா விமானம் பலரையும் ஈர்த்தது. இது 55 ஆயிரம் முதல் 70 ஆயிரம் அடி உயரத்தில் 50-ல் இருந்து 78 கி.மீ. வேகத்தில் 15 கிலோ எடையுள்ள கருவிகளைச் சுமந்துகொண்டு சூரிய ஒளியைப் பயன்படுத்திப் பறக்கும்.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிஸ்மாட்டிக், பிஏஇ சிஸ்டம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள பாசா35 என்ற அந்த டிரோனின் மாதிரி, இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

‘‘இந்த ஆளில்லா விமானத்தை, கண் காணிப்பு, தகவல் தொடர்பு, தொலை உணர்வு, சுற்றுச்சூழல் மாறுபாடு போன்றவற்றைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தலாம். இதுபோன்ற மற்ற ஆளில்லா விமானங்களுடன் ஒப்பிடும்போது இதன் விலை குறைவாக இருக்கும்’’ என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது கட்டமைப்பு நிலையில் இருக்கும் இந்த டிரோன், அடுத்த ஆண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிற 2021-ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்டுகள் வழியாக செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தும் அதிகச் செலவுமிக்க தொழில்நுட்பத்தைவிட, இது போன்ற டிரோன்கள் விலை குறைவான தாகவும், 4ஜி, 5ஜி போன்ற அதிவேக இணையதள பயன்பாட்டை ஊரகப்பகுதிக ளில் மேற்கொள்வதற்கு எளிதாகவும் இருக்கும் என்று இத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை