மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு + "||" + Handing over the money lying on the road Auto Driver Commissions compliment

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு
சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும் வெகுமதி வழங்கினார்.
சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார் (39). இவர் தியாகராயநகர் பஸ்நிலையம் அருகே சென்றபோது ரூ.74 ஆயிரம் பணத்தை தவறவிட்டார். சாலையில் கிடந்த அந்த பணத்தை கிழக்கு தாம்பரம் அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்(39) எடுத்து மாம்பலம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தார். அவருடைய நேர்மையை பாராட்டி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவரை நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கினார்.

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் செல்போன் பறிப்பு குற்றவாளியை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று பிடித்த அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் ஏட்டு என்.ஆறுமுகத்தையும், தி.மு.க. தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, சிறப்பாக பணியாற்றிய அமைந்தகரை போலீஸ் ஏட்டு டி.கணேசனையும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று பாராட்டி வெகுமதி அளித்தார்.