மாவட்ட செய்திகள்

தஞ்சையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணம்– நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Thanjani Dancer: Break the house lock - money laundered

தஞ்சையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணம்– நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணம்– நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை– பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜமால்உசேன் நகர் 2–ம் தெரு பாப்பாநகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது37). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய தந்தை ராமையன். தாயார் சேதம்மாள். முருகானந்தத்துக்கு மலர்விழி என்ற மனைவியும், பவித்ரன் என்ற மகனும் உள்ளனர்.

மலர்விழி தனது மாமனார், மாமியார் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஆடிஅமாவாசை என்பதால் ராமையனும், சேதம்மாளும் ஒரத்தநாட்டில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து இரவு மலர்விழியும், பவித்ரனும், அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இரவு தங்கினர்.

நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசுகள், வீடு கட்டியதற்காக வாங்கிய கடனை கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து ராமையன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார்சைக்கிள் திருட்டு
ஈரோட்டில் பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
2. காரைக்குடி பகுதியில் இரவு நேரத்தில் தொடர் திருட்டு கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் நியமிக்க வலியுறுத்தல்
காரைக்குடி பகுதியில் இரவு நேரங்களில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த கூடுதலான போலீசார் ரோந்து பணியில் நியமிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
3. சூளகிரி அருகே டிரான்ஸ்பார்மரில் அலுமினிய உதிரி பாகங்கள் திருட்டு
சூளகிரி அருகே உஸ்தலபள்ளி கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில், இருந்த அலுமினிய உதிரி பாகங்கள் திருட்டு போனது.
4. மடப்புரம் பகுதியில் மணல் திருட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் தொடந்து மணல் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
5. புஞ்சைபுளியம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை–பணம் திருட்டு
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர் திருடிச்சென்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...