மாவட்ட செய்திகள்

தரங்கம்பாடி தாலுகா வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் + "||" + Trankambadi taluk channels should take action to get water

தரங்கம்பாடி தாலுகா வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

தரங்கம்பாடி தாலுகா வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவெண்காடு,

செம்பனார்கோவிலில், த.மா.கா. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் கலியமூர்த்தி, சார்லஸ், பொறையாறு நகர தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தரங்கம்பாடி நகர தலைவர் மனோகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தரங்கம்பாடி தாலுகா கடைமடை பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறை நகர் பகுதியில் தேங்கும் கழிவுநீரை ஆறுபாதியில் உள்ள சத்தியவான் வாய்க்காலில் விடுவதை தடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விரைவில் த.மா.கா. சார்பில் போராட்டம் நடத்துவது, செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாணவர் அணி தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.