மாவட்ட செய்திகள்

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைப்போரின் கனவு பலிக்காது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு + "||" + The dream of those who want to cross the rule of the cross will not succeed

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைப்போரின் கனவு பலிக்காது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைப்போரின் கனவு பலிக்காது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைப்போரின் கனவு பலிக்காது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசும்போது கூறியதாவது:–

சிலர் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றைக்கு காவிரி, பாலாறு, தாமிரபரணியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் சிலரின் கனவு பலிக்காது. அ.தி.மு.க. அரசிற்கு பொதுமக்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.பி., சந்திரபிரபா எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கவர்னருக்கு எதிராக 5-வது நாளாக தர்ணா: முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து
கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக நேற்று 5-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது. இதையொட்டி முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
2. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 9 புதிய பஸ்கள் அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 9 புதிய பஸ்களை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
3. பெருந்துறை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி கணவன்– மனைவி சாவு
பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி கணவன் மற்றும் மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் யோகா, இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார்
யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவு தொடக்க விழா திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
5. புதுச்சேரியில் 4-வது நாளாக தர்ணா நீடிப்பு; ‘அரசுக்கு எதிராக கிரண்பெடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள்’ - முதல்-அமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு
புதுவை கவர்னர் மாளிகை முன்பு நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது ‘அரசை செயல்படவிடாமல் ரங்கசாமியும் கிரண்பெடியும் சேர்ந்து சதி செய்கின்றனர்’ என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.