மாவட்ட செய்திகள்

வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + The house door broke 18 pounds of jewelry, Rs.15 thousand theft of mysterious people

வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
குமாரபாளையத்தில் வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை, மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கவுரி தியேட்டர் பைபாஸ் அருகில் வசிப்பவர் செல்லமுத்து (வயது 59). இவர் குமாரபாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை செல்லமுத்துவின் குடும்பத்தினர் வெளியூர் சென்றனர். செல்லமுத்து வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார்.

இரவு 9 மணியளவில் செல்லமுத்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லமுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுபற்றி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். திருச்செங்கோடு துணை சூப்பிரண்டு சண்முகம், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு பதிந்திருந்த ரேகைகளை அவர்கள் பதிவு செய்தனர். செல்லமுத்து குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பட்டுக்கோட்டையில் கார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரத்து 100 ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
3. மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி
வேதாரண்யம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தின்போது கொள்ளையர்கள் தாக்கியதால் காயம் அடைந்த மூதாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. கருங்கல் அருகே மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு
மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக காவலாளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
5. திருமுருகன்பூண்டி அருகே கடையின் மேற்கூரையை பிரித்து திருடியவர் கைது
திருமுருகன்பூண்டி அருகே கடையின் மேற்கூரையை பிரித்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.