மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இறந்துபோன கணவர் உடலை மீட்க கோரி எம்.பி.யிடம் பெண் மனு + "||" + The woman petitioned to the MP demanding the recovery of her husband body at abroad

வெளிநாட்டில் இறந்துபோன கணவர் உடலை மீட்க கோரி எம்.பி.யிடம் பெண் மனு

வெளிநாட்டில் இறந்துபோன கணவர் உடலை மீட்க கோரி எம்.பி.யிடம் பெண் மனு
வெளிநாட்டில் இறந்துபோன கணவரின் உடலை மீட்டு தரக்கோரி கலெக்டர் மற்றும் எம்.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை வள்ளிசந்திர நகரை சேர்ந்தவர் நாகரத்தினம்(வயது 44). இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு சுபாஷினி(15), கார்த்திகை செல்வி(13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நாகரத்தினம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ஜமாமில் நக்மோர் என்ற இடத்தில் டிரைவராக வேலைக்கு சென்றார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 17–ந்தேதி அங்கு நடந்த விபத்தில் நாகரத்தினம் இறந்துள்ளார். இந்தநிலையில் அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப பணம் கட்ட வேண்டும் என்ற கூறியுள்ளனர். ஏற்கனவே மிகவும் வறுமையான நிலையில் இருக்கும் செல்வராணி, வெளிநாட்டில் இறந்துபோன கணவரின் உடலை ஊருக்கு கொண்டு வரமுடியாத நிலையில் தவித்து வருகிறார்.

இதனையடுத்து வெளிநாட்டில் இறந்த தனது கணவர் உடலை மீட்டு தரக்கோரி மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் கணவர் உடலை மீட்க முடியாமல் செல்வராணி பெரிதும் அவதியடைந்து வருகிறார்.

இதற்கிடையில் நேற்று அவர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். மேலும் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதனிடமும் தனது கணவர் உடலை ஊருக்கு கொண்டு வர உதவிடும்படி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.