மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் விபரீதம் தாய், தந்தையை கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Debt troublesome Tragedy: killed his Mother and father and Travels president suicide

கடன் தொல்லையால் விபரீதம் தாய், தந்தையை கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விபரீதம் தாய், தந்தையை கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவையில் கடன் தொல்லை காரணமாக தாய், தந்தையை கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை,

கோவை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு திருப்பூரில் இருந்து நேற்று மதியம் பேசியவர் ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாலமுருகன், மனைவி லட்சுமி, அவரது மகன் வைரமுத்து ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடிதம் எழுதி எனக்கு அனுப்பியுள்ளனர். உடனே அங்கு சென்று பாருங்கள் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் கீழே ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், மற்றொருவர் தூக்கில் தொங்கியபடியும் கிடந்தனர். அவர்கள் 3 பேரும் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பது தெரியவந்தது.

விசாரணையில், பிணமாக கிடந்தவர்கள் தனியார் பள்ளி பஸ் டிரைவர் பாலமுருகன் (வயது 55), அவரது மனைவி லட்சுமி (47) மற்றும் இவர்களின் மகன் வைரமுத்து (28) என்பது தெரியவந்தது. வைரமுத்துவுக்கு திருமணமாகவில்லை. இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார்.

தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன்தொல்லை காரணமாக வைரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்த பிறகு பெற்றோர் கஷ்டப்படுவார்கள் என்பதால் அவர்களையும் கொலை செய்து விட்டு தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து தந்தை, தாயாரின் மணிக்கட்டை கத்தியால் அறுத்துள்ளார். அதன்பின்னர் அவர்களின் கழுத்தை வைரமுத்து கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் வைரமுத்து தனது மணிக்கட்டை கத்தியால் அறுத்து கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வைரமுத்து இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு தனது சொத்தின் ஆவணங்கள் மற்றும் தான் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ பதிவை திருப்பூரில் உள்ள தனது உறவினருக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கூரியர் உறவினருக்கு கிடைத்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு வைரமுத்து தனது முகநூல் கணக்கை மூடியதும் விசாரணையில் தெரியவந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
சுசீந்திரம் அருகே செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. விவசாயி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேர் கைது
நாமகிரிப்பேட்டை அருகே, சொத்து தகராறில் இரும்பு கம்பியால் விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கொரடாச்சேரி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
4. தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை: திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை
தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
5. கந்து வட்டி கொடுமையால் பரிதாபம் முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை
நாகர்கோவில் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு, தபால் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியரின் தேர்வுகள்...