மாவட்ட செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம் + "||" + Motorcycle collision on truck 3 children were injured

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம்
சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் அன்புதாசன் (வயது 15). இவரும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கர்னல்ராஜ் (15), பாரதி (15) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் அன்புதாசன் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தனியார் பள்ளிக்கூட பஸ் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது மாணவ, மாணவிகள் உள்பட 12 பேர் காயம்
களியக்காவிளை அருகே தனியார் பள்ளிக்கூட பஸ் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது மாணவ, மாணவிகள் உள்பட 12 பேர் காயம்.
2. பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மாணவர்கள் பலி கல்லூரிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
புலிவலம் அருகே பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதல்; காவலாளி பலி
நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி பரிதாபமாக இறந்தார்.
4. கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை சாவு
கன்னியாகுமரி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
5. திண்டுக்கல் அருகே: இருதரப்பினர் இடையே மோதல்; 15 பேர் கைது
திண்டுக்கல் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-