மாவட்ட செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே 2 கூரை வீடுகள் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம் + "||" + 2 roofed houses near Thiruthiripoondi were damaged and Rs 1 lakh was damaged

திருத்துறைப்பூண்டி அருகே 2 கூரை வீடுகள் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

திருத்துறைப்பூண்டி அருகே 2 கூரை வீடுகள் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
திருத்துறைப்பூண்டி அருகே 2 கூரை வீடுகள் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்தன.
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் அழகன் (வயது60). விவசாயி. இவர் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டு கூரையில் நேற்று திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவென அருகே உள்ள பக்கிரிசாமி (60) என்பவருடைய கூரை வீட்டுக்கும் பரவியது. ஒரே நேரத்தில் 2 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) நடராஜன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் 2 கூரை வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. ரேசன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் தீக்கிரையாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...