மாவட்ட செய்திகள்

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கார்களில் கடத்திய ஹவாலா பணம் பறிமுதல், 2 பேர் கைது + "||" + Hawala money laundering, 2 arrested

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கார்களில் கடத்திய ஹவாலா பணம் பறிமுதல், 2 பேர் கைது

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கார்களில் கடத்திய ஹவாலா பணம் பறிமுதல், 2 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கார்களில் கடத்திய ரூ.2 கோடியே 44 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

கேரளா, கர்நாடகா மாநில எல்லைகள் இணையும் தமிழக பகுதி கூடலூர் ஆகும். இங்கு முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் கேரளாவின் முத்தங்கா சரணாலயம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் இருக்கிறது. மைசூருவில் இருந்து முத்தங்கா சரணாலயம் வழியாக சுல்தான்பத்தேரி, பந்திப்பூர் மற்றும் முதுமலை வழியாக கூடலூர், ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் காரணமாக எல்லைகளில் கேரள–தமிழக போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து முத்தங்கா சரணாலயம் வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக வயநாடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்புதீன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் 2 மணிக்கு முத்தங்கா சரணாலயம் அருகில் உள்ள பொன்குழி என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளா நோக்கி 2 கார்கள் வந்தன. உடனே அந்த கார்களை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 2 கார்களிலும் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த அறைகளை திறந்து பார்த்தபோது, அதில் மொத்தம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 70 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 கார்களின் டிரைவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளியை சேர்ந்த அப்துல் லதீப்(வயது 41), ஜெய்சன்(31) ஆகியோர் என்பதும், பறிமுதல் செய்யப்பட்டது கணக்கில் வராத ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டிரைவரை கீழே தள்ளி விட்டு தேங்காய்களுடன் லாரி கடத்தல்; 6 பேர் கைது
டிரைவரை கீழே தள்ளி விட்டு தேங்காய்களுடன் லாரியை கடத்திச்சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. அனுப்பர்பாளையம் பகுதியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது
அனுப்பர்பாளையம் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. வாணாபுரம் அருகே உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் பயங்கர மோதல் 7 பேர் கைது
வாணாபுரம் அருகே உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டதோடு சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.
4. செம்பட்டி அருகே: 4 மண்ணுளி பாம்புகள் பறிமுதல் - இலங்கை அகதிகள் 2 பேர் கைது
செம்பட்டி அருகே விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 4 மண்ணுளி பாம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இலங்கை அகதிகள் 2 பேரை கைது செய்தனர்.
5. குடும்ப தகராறில் தாயை கீழே தள்ளி கொன்றவர் மனைவியுடன் கைது
உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறில் தாயை கீழே தள்ளி கொன்ற சம்பவத்தில் மகன், மருமகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.