மாவட்ட செய்திகள்

ராமேசுவரத்தில் மல்லிகைநகர் பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டி 4 மாதமாகியும் சாலை அமைக்கப்படாத அவலம் + "||" + Jolly stones are pumped for 4 months and the road is not set

ராமேசுவரத்தில் மல்லிகைநகர் பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டி 4 மாதமாகியும் சாலை அமைக்கப்படாத அவலம்

ராமேசுவரத்தில் மல்லிகைநகர் பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டி 4 மாதமாகியும் சாலை அமைக்கப்படாத அவலம்
ராமேசுவரத்தில் மல்லிகைநகர் பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டி 4 மாதங்கள் ஆகியும் சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டம் நடத்த போவதாக கூறினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. அது போல் 21 வார்டுகளுக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் 11–வது வார்டுக்குட்பட்ட மல்லிகை நகர் பகுதியில், ரெயில்வே நிலையம் அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் இருந்து ஆபுல்காபுல் தர்கா மற்றும் மல்லிகைநகர் வரையிலும் புதிதாக சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.

இவை கொட்டப்பட்டு 4 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அந்த பகுதியில் சாலை போடப்படவில்லை. இதனால் தினமும் அந்த பகுதியை சேர்நத பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்கள் ஜல்லிக்கற்கள் மீது நடந்து செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் இருசக்கரம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த சாலையில் செல்ல பெரிதும் சிரமமடைந்து வருகின்றன. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்தநிலையில் மல்லிகை நகர் பகுதியில் இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலைப்பணியை முழுமையாக முடிக்காவிட்டால் அனைவரும் ஒன்று சேர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காந்தி சிலை முன் போலீஸ் ஏட்டு மகன் தர்ணா; படத்துடன் அமர்ந்து திடீர் போராட்டம்
ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து குண்டுவெடிப்பில் பலியான போலீஸ் ஏட்டு மகன் புதுவை கடற்கரையில் காந்தி சிலை முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
2. ஜாக்டோ–ஜியோ சார்பில் அடையாள வேலை நிறுத்த போராட்டம், வருகிற 4–ந்தேதி நடக்கிறது
பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4–ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
3. சென்னையில் 2–ந்தேதி காந்தி சிலை முன்பு ‘கள்’ படையலிட்டு போராட்டம் - நல்லசாமி பேட்டி
சென்னையில் 2–ந்தேதி காந்தி சிலை முன்பு ‘கள்’ படையலிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
4. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்
மூலனூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
5. எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை கண்டித்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.