மாவட்ட செய்திகள்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - தங்க தமிழ்செல்வன் பேச்சு + "||" + We will win the Thiruvarur, Tiruparankundram by-elections

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - தங்க தமிழ்செல்வன் பேச்சு

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - தங்க தமிழ்செல்வன் பேச்சு
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும் என்று தங்க தமிழ்செல்வன் பேசினார்.

பரமக்குடி,

பரமக்குடியில் வருகிற 11–ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளார். இதனையொட்டி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமக்குடி சமூக நலச்சங்க மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், மாநில பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, கழக அமைப்பு செயலாளர்கள் சோமாத்தூர் சுப்பிரமணியன், ஜி.முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி நகர் செயலாளர் வேந்தை சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:– 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வர உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் நாங்கள் சட்டசபைக்கு சென்று மக்களுக்காக பேசுவோம். மாறுபட்ட தீர்ப்பு வந்தால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து விசாரணை முடியும் வரை சட்டசபைக்கு சென்று மக்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அனுமதி பெறுவோம்.

தற்போது காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இடைத்தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சத்தில் உள்ளது. இடைத்தேர்தலுக்கு பிறகு யார் காணாமல் போவது என்பது தெரியும். மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வருகிற 11–ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் டி.டி.வி.தினகரனுக்கு ஏராளமானவர்கள் சொந்த வாகனங்களில் வந்து சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.