மாவட்ட செய்திகள்

ஆற்று நீர் பாசன வாய்க்கால்களை தூர்வாரி நீர் செல்ல வழிவகை செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் + "||" + Emphasizing the flow of water to irrigate river water irrigation channels, Demonstration on behalf of

ஆற்று நீர் பாசன வாய்க்கால்களை தூர்வாரி நீர் செல்ல வழிவகை செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆற்று நீர் பாசன வாய்க்கால்களை தூர்வாரி நீர் செல்ல வழிவகை செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டவும், ஆற்று நீர் பாசன வாய்க்கால்களை தூர்வாரி நீர் செல்ல வழிவகை செய்ய வலியுறுத்தி தா.பழூர் பஸ் நிறுத்தத்தில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,

தா.பழூரில் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க 5 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு தடுப்பணை கட்டவேண்டும். கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டவும், ஆற்று நீர் பாசன வாய்க்கால்களை தூர்வாரி நீர் செல்ல வழிவகை செய்ய வலியுறுத்தி தா.பழூர் பஸ் நிறுத்தத்தில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் வைத்தி கண்டன உரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர்கள் கொளஞ்சி வேல்(கிழக்கு), முருகன் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். முன்னதாக பா.ம.க.வினர் தா.பழூர் பஸ் நிறுத்தத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பஸ் நிறுத்தத்தை வந்தடைந்தனர். இதில் ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் அன்பழகன், ராஜேந்திரன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவராஜ் நன்றி கூறினார்.