மாவட்ட செய்திகள்

கோர்ட்டு விதித்த தண்டனைக்கு பின்னர் தலைமறைவாக இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் கைது + "||" + Co-operative Society Secretary arrested

கோர்ட்டு விதித்த தண்டனைக்கு பின்னர் தலைமறைவாக இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் கைது

கோர்ட்டு விதித்த தண்டனைக்கு பின்னர் தலைமறைவாக இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் கோர்ட்டு விதித்த தண்டனைக்கு பின்னர் தலைமறைவாக இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் உதயசூரியனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 1993–ம் ஆண்டு செயலாளராக பணியாற்றியவர் உதயசூரியன். இவர் ரூ.13 லட்சம் கையாடல் செய்ததாக சிவகங்கை மாவட்ட வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் உதயசூரியனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உதயசூரியன் மேல்முறையீடு செய்தார். அதில் கீழ் கோர்ட்டில் விதித்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் உதயசூரியன் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை பிடிக்க கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

 இதனைத்தொடர்ந்து வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இனஸ்பெக்டர் பாஸ்கரன், சப்–இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் உதயசூரியனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை கோர்ட்டு முன்பு பரபரப்பு: பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது கார் பறிமுதல்
நெல்லை கோர்ட்டு முன்பு பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
2. தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அண்ணியை கொன்று உடலை சாக்குமூடையில் கட்டி வீசியதாக வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கரூரில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது
கரூரில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பயங்கரம்: இரும்பு கரண்டியால் குத்தி வாலிபர் கொடூரக்கொலை நண்பர் கைது
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இரும்பு கரண்டியால் குத்தி வாலிபரை கொடூரமாக கொலை செய்ததாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
5. ஓடும் ரெயிலில் செல்போன் பறித்ததால் தவறி விழுந்த பயணி சாவு; 2 சிறுவர்கள் கைது
ஓடும் ரெயிலில் செல்போன் பறித்தபோது தவறி விழுந்து காயம் அடைந்த பயணி இறந்தார். இந்த வழக்கில் தேடப்பட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.