மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் டிரைவர் காயம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு + "||" + Driver lorry crash on cargo auto Wounded people were injured in the road blockade

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் டிரைவர் காயம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் டிரைவர் காயம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
அன்னவாசல் அருகே பெருமாநாட்டில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயமடைந்தார். இதைக்கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாட்டில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நாமக்கல் மாவட்டம் பொத்தனூரை சேர்ந்த தங்கமணி (வயது47) என்பவர் ஓட்டினார். அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து பெருமா நாட்டை நோக்கி ஒரு சரக்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அதை புதுக்கோட்டை மாவட்டம் வட மலாப்பூரை சேர்ந்த ரெங்கன் (வயது61) ஓட்டியுள்ளார். இந்த நிலையில் பெருமாநாடு முக்கம் அருகே இரண்டு வாகனமும் வந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் சரக்கு ஆட்டோ பள்ளத்தில் இறங்கியது. லாரியும் சாலை ஓரத்தில் இறங்கியது. இதில் சரக்கு ஆட்டோ டிரைவர் ரெங்கன் காயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த ரெங்கனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாநாடு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அங்கு கூடினர். பின்னர் இந்த சாலை விபத்திற்கு சாலைகளில் இருபுறங்களில் மண் நிரப்பாமல் இருந்ததே காரணம் எனக்கூறி, உடனடியாக அதனை சரிசெய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை-குடுமியான்மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா, அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உங்களது கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் பெருமாநாடு அருகே புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பின்பு அந்த பணிகள் முடிந்து இருபுறமும் மண் நிரப்பாமல் உள்ளதால் அவ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையை விட்டு இறக்கும் போது நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் உயிர் பலியும் ஏற்படுகின்றது. எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் பள்ளிக்கூட பஸ் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது மாணவ, மாணவிகள் உள்பட 12 பேர் காயம்
களியக்காவிளை அருகே தனியார் பள்ளிக்கூட பஸ் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது மாணவ, மாணவிகள் உள்பட 12 பேர் காயம்.
2. மயிலாடுதுறை அருகே விறகு கட்டையால் பிளம்பர் அடித்துக் கொலை லாரி டிரைவர் கைது
மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் விறகு கட்டையால் பிளம்பர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
3. திண்டுக்கல்லில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி: பணிமனை வளாகத்தில் விஷம் குடித்ததால் பரபரப்பு
திண்டுக்கல்லில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில், டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. திருச்சியில் பயங்கரம்: டிரைவர் கடத்தி படுகொலை - உடலை மூட்டையாக கட்டி ஆட்டோவில் போட்டுச்சென்ற கொலையாளிகள்
திருச்சியில் டிரைவரை கடத்தி, குத்திக்கொன்று உடலை மூட்டையாக கட்டி, ஆட்டோவிலேயே கொலையாளிகள் போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயம்
தர்மபுரி அருகே பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர். இதனால் தரமான பஸ்களை இயக்க கோரி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.