மாவட்ட செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு + "||" + More than that Death of the drunkard

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு,

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்டோவில் அழைத்து வரப்பட்ட அவரை ஆட்டோ டிரைவர் அந்த பகுதியில் இறக்கி விடுவது தெரியவந்தது.

விசாரணையில், இறந்து கிடந்தவர் செங்கல்பட்டை அடுத்த அமனப்பாக்கத்தை சேர்ந்த சேகர்(வயது 40) என்பதும், அவருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் குடும்பத்தினரை விட்டு பிரிந்து செங்கல்பட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்த அவரை ஆட்டோ டிரைவர் அந்த பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்திருக்கலாம் என்ற சந்தேத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.