மாவட்ட செய்திகள்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + LIC Agents demonstrated

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீடு) முகவர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,

எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீடு) முகவர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். செயலாளர் தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி பிரீமியத்தின் மீதான அனைத்து ஜி.எஸ்.டி.-ஐ ரத்து செய்ய வேண்டும். பாலிசிகளை புதுப்பிக்கும் பொருட்டு வழங்கப்பட்டு உள்ள காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய கமிஷனை முகவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதன்மை காப்பீடு ஆலோசகர் சுப்பிரமணியன் மற்றும் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ராஜாராம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.