மாவட்ட செய்திகள்

சொத்து தகராறில் சித்தியை கொலை செய்த தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Police blazer for worker who killed Siddhi in property dispute

சொத்து தகராறில் சித்தியை கொலை செய்த தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு

சொத்து தகராறில் சித்தியை கொலை செய்த தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு
அரவக்குறிச்சி அருகே சொத்து தகராறில் சித்தியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பெரியமஞ்சுவழி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு 2 மனைவி. இதில் முதல் மனைவி பாப்பாத்தி, 2-வது மனைவி லட்சுமி(வயது 68). பாப்பாத்தி மகன் கருப்பசாமி(50) மதுரை வாடிப்பட்டியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பெரியமஞ்சுவழி அருகே உள்ள நடுப்பட்டியில் வசித்து வந்த தனது சித்தி லட்சுமி வீட்டிற்கு வந்த கருப்பசாமி சொத்தை பிரித்து தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுஉள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து லட்சுமியின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அரவக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். வேலுச்சாமியும், பாப்பாத்தியும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சுசி ஈமு நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் போலீசார் வேண்டுகோள்
சுசி ஈமு நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
2. சாயப்பட்டறை உரிமையாளர் விஷமாத்திரை தின்று தற்கொலை போலீசார் விசாரணை
தோரணக்கல்பட்டி அருகே சாயப்பட்டறை உரிமையாளர் விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கண்ணில் மிளகாய்பொடி தூவி டாஸ்மாக்கடை விற்பனையாளரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு போலீசார் வலைவீச்சு
கண்ணில் மிளகாய்பொடி தூவி டாஸ்மாக்கடை விற்பனையாளரிடம் ரூ.5 லட்சத்தை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. முத்துப்பேட்டையில் ஆற்றில் தி.மு.க. தொண்டர் பிணம் போலீசார் விசாரணை
முத்துப்பேட்டையில் ஆற்றில் தி.மு.க. தொண்டர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. காணாமல் போனவர் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை
காணாமல் போனவர் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை