மாவட்ட செய்திகள்

மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி + "||" + In student affairs Soundarajan Tamilisai You should behave well

மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

கோவை,

கோவை வந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கோவை நகரில் 24 மணி நேர குடிநீர் வினியோகத்துக்காக மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிறுவனத்து டன் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 18–ந் தேதி சி.ஐ.டி.யு., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகங்கள் முன்பும் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கிறது.

கோவை மக்களின் வாழ்வாதார பிரச்சினையை மையமாக வைத்து நடைபெறும் இந்த போராட்டத் தை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யக்கோரி தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

தூத்துக்குடியில் ஆராய்ச்சி மாணவி சோபியா, தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இந்த விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கில் மாணவிக்கு தீவிரவாதிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார். இது தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழகல்ல. அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின்பேரில் மாணவி மீது போலீசார் நட வடிக்கை எடுத்துள்ளனர். இதுபோல் தமிழிசை மீது மாணவியின் தந்தை கொடுத்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் தலையை கொண்டு வந்தால் 1 கோடி ரூபாய் என சிலர் அறிவிப்பு வெளியிட்டனர். அப்போதும் அவர் அமைதியாகத்தான் இருந்தார்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு தண்டனை
முத்தூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், அதற்கு உடந்தையாக இருந்த உறவினருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
2. கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 141 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பாஸ்கர் வழங்கினார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 141 மாணவ–மாணவிகளுக்கு துணைவேந்தர் பாஸ்கர் பட்டங்களை வழங்கினார்.
4. 9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
9, 10–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு விரைவில் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
5. பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் முதல்முறையாக மாநில அளவிலான பள்ளிகள் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை