மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் + "||" + Retired government employees in Nagercoil Darna fight

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும், பொங்கல் பரிசு ரூ.500 வழங்க வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை களைந்திட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கனகசபாபதி தலைமை தாங்கினார். பொருளாளர் நல்லபெருமாள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட இணைச்செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார். மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் 6 மணி வரை நடந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ஏர்வாடி மீனவர்கள் கடற்கரையில் போராட்டம்
ஏர்வாடி கடற்கரையில் சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் வெளியூர் விசைப்படகு மீனவர்களை கண்டித்து மீனவர்கள் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. மருத்துவக்கல்லூரி முதல்வரை கண்டித்து செவிலியர்கள் திடீர் போராட்டம்; நோயாளிகள் தவிப்பு
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி முதல்வரை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் திடீரென பணிகளை புறக்கணித்து விட்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மரங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நாமக்கல் அருகே பரபரப்பு
நாமக்கல் அருகே மரங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கிராம மக்கள் போராட்டம் எதிரொலி மதுபானம் விற்றவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மதுபானம் விற்றவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. சபரிமலை புனிதம் காக்க கோரி அய்யப்ப பக்தர்கள் போராட்டம்
பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.