மாவட்ட செய்திகள்

செங்கம்: வாலிபர் மர்மச்சாவு - உறவினர்கள் சாலை மறியல் + "||" + Sengam: Youth Mystery - Relatives of the road stir

செங்கம்: வாலிபர் மர்மச்சாவு - உறவினர்கள் சாலை மறியல்

செங்கம்: வாலிபர் மர்மச்சாவு - உறவினர்கள் சாலை மறியல்
செங்கத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்,

செங்கத்தை அடுத்த வலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 29). இவர் செங்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜா பள்ளி அருகே மர்மமான முறையில் சுருண்டு விழுந்து இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ராஜாவின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் செங்கம் திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராஜாவின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளியை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.