மாவட்ட செய்திகள்

கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து திருவாரூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + The PMKVP demonstrated in Thiruvarur, denouncing the lack of water for the area

கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து திருவாரூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து திருவாரூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து பா.ம.க.வினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,

கர்நாடகாவில் கன மழை பெய்ததால், தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை 4 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் நம்பிக்கையுடன் சம்பா சாகுபடியை தொடங்கினர்.

இந்த நிலையில் ஆறு, வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் கடைமடை பகுதியை தண்ணீர் சென்றடையவில்லை. இதை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் (வடக்கு), ஏ.சி.பாலு (தெற்கு), மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் மனோகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. குமரி வனப்பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைக்க எதிர்ப்பு: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குமரி வனப்பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
2. புதிய கோர்ட்டு வளாகத்தில் அடிப்படை வசதிகள் கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி புதிய கோர்ட்டு வளாகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. எச்.ராஜாவை கைது செய்யக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் வகுப்புகளை புறக்கணித்தனர்
எச்.ராஜாவை கைது செய்யக்கோரி திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கருணாஸ் எம்.எல்.ஏ. கைதை கண்டித்து: 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு; 2 பேர் காயம்
கருணாஸ் எம்.எல்.ஏ. கைதை கண்டித்து நெல்லையில் நேற்று முன்தினம் இரவு 3 அரசு பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். நெல்லையில் முக்குலத்தோர் புலிப்படையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.