மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு + "||" + A case was filed against 50 people involved in the road blockade

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு
திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள சித்திரையூரில் அரசு டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையினால் பெண்கள், மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வயல்களிலும், வாய்க்கால்களிலும் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் குன்னியூர் கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குன்னியூரை சேர்ந்த மணிகண்டன், மாதவன், விஜயகுமார், குருமூர்த்தி, சண்முகம், சரவணகுமார் மற்றும் பெண்கள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி? அரசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 15 பேர் கைது
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்குவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதில் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. இரணியலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ரெயில் மறியல் முயற்சி 31 பேர் கைது
இரணியலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வேதாரண்யம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. காலிக்குடங்களுடன் மறியலுக்கு முயன்ற பெண்களால் பரபரப்பு
திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலிக்குடங்களுடன் மறியலுக்கு முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
ஆத்தூரில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.