மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் + "||" + Motorcycles seized by stolen youth 23 motorcycles seized

மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சீர்காழியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 23 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
சீர்காழி,

சீர்காழி அருகே சட்டநாதபுரம் கைகாட்டியில் நேற்று முன்தினம் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழியை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான பேசி உள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமம் மெய்யன்நகரை சேர்ந்த சாமித்துரை மகன் சுந்தர் என்ற பாலசுந்தர் (வயது 23) என்பதும், இவர் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், பொறையார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 23 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயல் சீரமைப்பு பணியில் தாமதம்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதம் தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது
புதுக்கோட்டையில் ‘கஜா‘ புயல் சீரமைப்பு பணி தாமதமாக நடைபெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது செய்யப்பட்டார்.
2. போலீஸ் நிலையத்தில் புகுந்து போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது
ஜெயங்கொண்டம் அருகே போலீஸ் நிலையத்தின் உள்ளே புகுந்து, போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நடன இயக்குனர் கைது
வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய நடன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
4. பெண்ணை மானபங்கம் செய்த முதியவர் கைது
மும்பை தாதரில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருபவர் அசோக் மஸ்த்கர் (வயது 75).
5. வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பங்குச்சந்தை தரகரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பங்குச்சந்தை தரகரை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். 23 ஆண்டுக்கு பிறகு சிக்கினார்.