மாவட்ட செய்திகள்

ரூ.1½ லட்சம் போதை பொருட்கள் கடத்தல் கார் பறிமுதல்; 2 பேர் கைது + "||" + Rs.1½ lakh drug smuggling car seized; 2 people arrested

ரூ.1½ லட்சம் போதை பொருட்கள் கடத்தல் கார் பறிமுதல்; 2 பேர் கைது

ரூ.1½ லட்சம் போதை பொருட்கள் கடத்தல் கார் பறிமுதல்; 2 பேர் கைது
ரூ.1½ லட்சம் மதிப்புடைய போதை பொருட்களை கடத்தி வந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை போலீசார் வழிமறித்து, நிறுத்த முயன்றனர். ஆனால் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மற்றொரு வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்று வழிமறித்து, அதில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து போலீசார் காரை சோதனையிட்டனர். இதில் காரில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், காரையும், அதில் வந்தவர்களையும் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பகவதிசரணம் ஆகியோர் காரில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த ஜவான்ராம்ஜி மகன் ஜித்துபடேல் (வயது21), தாமோந்திரசிங் மகன் நரசிங்கா(34) ஆகியோர் என்பதும், இவர்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்து, தஞ்சையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய போதை பொருட்களையும், அவற்றை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜித்துபடேல், நரசிங்கா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எலிக்காய்ச்சல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் மருத்துவ குழுவினர் சோதனை
கேரளாவில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக-கேரள எல்லையில் மருத்துவ குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2. ஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு மையம், சுகாதார வளாகங்களில் கலெக்டர் கதிரவன் சோதனை
ஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்ட கலெக்டர் கதிரவன் சத்துணவு மையம், சுகாதார வளாகத்தை பார்வையிட்டார். அப்போது பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
3. காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த வாகன சோதனை மையங்கள்
காஞ்சீபுரம் நகரத்தை பிளாஸ்டிக் மாசில்லா காஞ்சீபுரம் என உருவாக்க நரக எல்லைகளில் வாகன சோதனை மையங்களை கலெக்டர் பா.பொன்னையா திறந்து வைத்தார்.
4. மசினகுடியில் வாகன சோதனை: கர்நாடகாவை சேர்ந்த கஞ்சா வியாபாரி கைது
மசினகுடியில் கர்நாடகாவை சேர்ந்த கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
5. திம்பம் மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க லாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு
திம்பம் மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க லாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பண்ணாரி சோதனைச்சாவடியில் கம்பங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.