மாவட்ட செய்திகள்

வீரபாண்டி அருகே ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை + "||" + The old man committed suicide by jumping from a hospital near Veerapandi

வீரபாண்டி அருகே ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

வீரபாண்டி அருகே ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
வீரபாண்டி அருகே, தனியார் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். மகன்கள், மகள்கள் கவனிக்காததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஆட்டையாம்பட்டி,

தாரமங்கலம் அருகே உள்ள வனவாசி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 73). இவர் கடந்த 3 மாத காலமாக வீரபாண்டி அருகே சீரகாபாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருந்த போதிலும் யாரும் உடன் இருந்து கவனிக்கவில்லை என்றும், இதனால் அவர் விரக்தியடைந்து, இந்த விபரீத முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்டுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெருந்துறை அருகே ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை; போலீசார் விசாரணை
பெருந்துறை அருகே தூக்குப்போட்டு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்
குடும்பத்தகராறு காரணமாக திருப்பூர் சாமுண்டிபுரத்தில் 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு, தானும் அதனை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தர்ணா போராட்டம்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ராஜபாளையம் அருகே அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை - பணம் கொள்ளை
அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.