மாவட்ட செய்திகள்

சேலத்தில் பரபரப்பு: போலி உதவி கலெக்டர் சிக்கினார் - போலீசார் விசாரணை + "||" + Salem farewell: Fake assistant collector trapped - police investigate

சேலத்தில் பரபரப்பு: போலி உதவி கலெக்டர் சிக்கினார் - போலீசார் விசாரணை

சேலத்தில் பரபரப்பு: போலி உதவி கலெக்டர் சிக்கினார் - போலீசார் விசாரணை
சேலத்தில் போலி உதவி கலெக்டர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,

சேலம் மாநகரின் மைய பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 40-க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் கலெக்டர் அலுவலகத்துக்குள் ஒருவர் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர்களிடம், தான் விழுப்புரம் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார். இதற்கான அடையாள அட்டை ஏதும் உள்ளதா? என்று அதிகாரிகள் கேட்டதற்கு அவர் மழுப்பலான பதில் கூறினார்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை பிடித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தலைவாசல் அருகே உள்ள பட்டுதுறை பகுதியை சேர்ந்த ஜெயராஜ்(வயது 51) என்பதும், எம்.ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் போலி உதவி கலெக்டர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அண்ணியை கொன்று உடலை சாக்குமூடையில் கட்டி வீசியதாக வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. மார்த்தாண்டம் அருகே பரபரப்பு: பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவிகளுக்கு அரிவாள் வெட்டு - அரசு பஸ் டிரைவர் கைது
பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவிகள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
3. சேலத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 182 பேர் கைது
சேலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்திய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 182 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கார் மோதியதால் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி - கோவை பட்டதாரி கைது
சேலத்தில் கார் மோதியதில் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியானார். இது தொடர்பாக கோவை பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
5. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே கண்மாய் பகுதியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் போலீசில் சரணடைந்தார்.