மாவட்ட செய்திகள்

பிளஸ்–2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + 2 plus student abducted young men arrested in the Act pokso

பிளஸ்–2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்–2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
நிலக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்துப்பட்டார்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர்கள் இளங்கோவன்(வயது24), கார்த்திக், குமரேசன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து, 17 வயதான பிளஸ்–2 படித்து வந்த மாணவியை கடந்த 31–ந்தேதி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தி 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தார்.

இந்நிலையில் போலீசார், இளங்கோவனை அவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து அவர் அந்த மாணவியை நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் மாணவியை கடத்தியதாக இளங்கோவனை போக்சோ சட்டத்தின்(பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்) கீழ் போலீசார் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு ரிசனா பர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் சிறை காவலில் வைக்கவும், சிறுமியை மதுரையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கும்படியும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து இளங்கோவன் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார்த்திக், குமரேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜர்
வழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
2. 8–ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரம்: போலீசார் எச்சரித்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவன்
திருப்பூரில் 8–ம் வகுப்பு மாணவிக்கு பிளஸ்–1 படிக்கும் மாணவர் காதல் கடிதம் கொடுத்த விவகாரத்தில், மாணவனை போலீசார் எச்சரித்தனர். இதனால் மனம் உடைந்த மாணவன், வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
3. ஆர்.எஸ்.மங்கலத்தில் பெற்றோரை வீட்டுக்குள் அனுமதிக்காத மகன் கைது
ஆர்.எஸ்.மங்கலத்தில் பெற்றோரை வீட்டுக்குள் அனுமதிக்காத மகனை போலீசார் கைது செய்தனர்.
4. கொலைக்கு பழி தீர்க்க கோர்ட்டுக்கு அரிவாளுடன் வந்த பெண் உள்பட 2 பேர் கைது
பெண் கொலைக்கு பழி தீர்க்க கோர்ட்டுக்கு அரிவாளுடன் வந்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. குஜராத் எம்.எல்.ஏ. மேவானி மற்றும் கன்னையா குமார் மீது மை வீச்சு
குஜராத் எம்.எல்.ஏ. மேவானி மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் கன்னையா மீது மை வீசிய இந்து சேனாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.