மாவட்ட செய்திகள்

வாழப்பாடி: அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு + "||" + Valappadi: Collector's Research in Government Hospital

வாழப்பாடி: அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

வாழப்பாடி: அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
வாழப்பாடி,

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த மாவட்ட கலெக்டர் ரோகிணி, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அரசு திட்டங்கள் குறித்து கலந்தாய்வு நடத்தினார். பின்னர் வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று பொது வினியோக கடையை ஆய்வு செய்தார்.

இதையடுத்து வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் பிரசவ வார்டு பகுதிகளை ஆய்வு செய்தார். வெளிநோயாளிகள் பதிவேடுகளை பெயர், முகவரியுடன் பராமரிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது வாழப்பாடி தாசில்தார் பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலினி, செந்தில்குமார், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராதிகா மற்றும் துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

இதற்கிடையில் கலெக்டர் ஆய்வுக்கு வந்துள்ளதை அறிந்த வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, அவரிடம் வாரத்திற்கு இருமுறை மேட்டூர் காவிரி நதிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதும் குடிநீர் வினியோகிக்கவும், அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளித்தலை அருகே சாலையோர கடையில் கம்மங்கூழ் அருந்திய கலெக்டர்
குளித்தலை அருகே சாலையோர கடையில் கம்மங்கூழ் வாங்கி மாவட்ட கலெக்டர் அருந்தினார்.
2. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீர் சாவு - போலீசார் விசாரணை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஊத்துக்கோட்டையில் 210 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்
ஊத்துக்கோட்டையில் 210 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
4. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதம்
திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை - டீன் விளக்கம்
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை என மருத்துவமனை டீன் அசோகன் விளக்கம் அளித்து உள்ளார்.