மாவட்ட செய்திகள்

சேலம் வடக்கு தொகுதி: ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் + "||" + Salem North Block: Rs.1.66 crore development projects - Rajendran MLA Started

சேலம் வடக்கு தொகுதி: ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

சேலம் வடக்கு தொகுதி: ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சேலம் வடக்கு தொகுதியில் ரூ.1.66 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சேலம்,

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.21.95 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது. இதே போன்று சேலம் மாநகருக்கு உட்பட்ட 10 மற்றும் 13-வது வார்டில் தலா ரூ.8.75 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா கன்னங்குறிச்சியில் நடைபெற்றது. இவற்றை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதே போன்று 6-வது வார்டு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ரூ.11.70 லட்சத்தில் தார் சாலை, 7-வது வார்டு ரூ.7.60 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அதே போன்று பாரதி நகரில் ரூ.3 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 8-வது வார்டு சந்திரன் கார்டன் பகுதியில் ரூ.16.21 லட்சத்தில் தார் சாலை, வைஷ்ணவி கார்டன் பகுதியில் ரூ.10.40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், குருக்கள் தெரு பகுதியில் ரூ.5 லட்சத்தில் தடுப்பு சுவர் ஆகியவை அமைக்கப்பட்டது.

இதே போன்று 12-வது வார்டு சக்தி நகரில் ரூ.10.40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 13-வது வார்டு பகுதியில் ரூ.3½ லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம், 14-வது வார்டு மக்கான் தெரு பகுதியில் ரூ.6½ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 15-வது வார்டு காமராஜ் காலனியில் ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி மையம், 27-வது வார்டு சின்னப்பன்வீதியில் ரூ.6½ லட்சத்தில் கான்கிரீட் சாலை என மொத்தம் ரூ.1.66 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநகர செயலாளர் ஜெயக்குமார், அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், சாந்தமூர்த்தி, கேபிள் ராஜா, பிரகாஷ், கன்னங்குறிச்சி பேரூர் கழக செயலாளர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் பூபதி, முன்னாள் கவுன்சிலர்கள் இளவரசன், கருணாகரன், சீனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. சேலம்: 25-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: மேடை அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா
சேலத்தில் 25-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதையொட்டி மேடை அமைக்கும் பணிக்காக கால்கோள் விழா நேற்று நடந்தது.
3. லாரி வாடகை கட்டணம் 22 சதவீதம் வரை உயர்வு - புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர்
வருகிற 24-ந் தேதி முதல் லாரி வாடகை கட்டணம் 22 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் தெரிவித்தார்.
4. சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை தொடக்கம் - மாவட்ட சிறு, குறுதொழிற்சாலைகள் சங்க தலைவர் தகவல்
அடுத்த மாதம் 28-ந் தேதி முதல் சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை தொடங்கப்படும் என மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.
5. மூதாட்டியிடம் 30 பவுன் நகை திருட்டு - 2 பெண்களுக்கு வலைவீச்சு
சேலத்தில் மூதாட்டியிடம் 30 பவுன் நகையை திருடி சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.