மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய் + "||" + 2 A mother who tried to commit suicide by poisoning children

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்
நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தாயாரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்கள் 3 பேரும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல், 


நாமக்கல் நகரில் திருச்சி சாலை ஆண்டவர்நகரை சேர்ந்தவர் சரவணன். ரிக் வண்டி தொழிலாளி. இவரும், சசிகலா (வயது29) என்ற பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இவர்களுக்கு அனிஷா (8) என்ற மகளும், தனிஷ் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே 2 மற்றும் 1-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சசிகலா சாப்பாட்டில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவரும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த விவகாரம்: காதலை கைவிடாத மகளை கொன்று தாய் தற்கொலை செய்தது அம்பலம்
விருதுநகர் அருகே பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் பிணமாக கிடந்த விவகாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காதலை கைவிடாத மகளை கொன்று தாய் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
2. வருசநாடு அருகே, குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
வருசநாடு அருகே, குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொன்று தாய் தற்கொலை - போலீசார் விசாரணை
சேலத்தில் தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.