மாவட்ட செய்திகள்

ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது + "||" + Rs 7 lakh jewelery, money laundering arrested

ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது

ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது
உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்கார வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மும்பை சுன்னாப்பட்டியில் உள்ள விருந்தாவன் குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வருபவர் சஞ்சய் வினய் (வயது62). இவர் கடந்த மாதம் குடும்பத்தினருடன் மகாபலேஷ்வருக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

இந்தநிலையில் அவர் 5 நாட்கள் கழித்து திரும்பி வந்த போது வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய் வினய், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சம்பவம் நடந்த நாள் முதல் சஞ்சய் வினய் வீட்டில் வேலை பார்த்து வந்த ராஜேந்திர தர்மதேவ் (26) என்பவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பீகாரில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சஞ்சய் வினயின் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

உரிமையாளர் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று இருந்த நேரத்தில் ராஜேந்திர தர்மதேவ் குளியல் அறை ஜன்னல் வழியாக அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அவர் பீரோவில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் வேலைக்காரர் ராஜேந்திர தர்மதேவை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பட்டுக்கோட்டையில் ஜவுளிக்கடையின் ‘ஷட்டரை’ உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை
பட்டுக்கோட்டையில், ஜவுளிக்கடையின் ஷட்டரை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியில் ரெயில் பயணிகளிடம் நகை, செல்போன்கள் திருடிய ஆசாமி கைது
திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியில் ரெயில் பயணிகளிடம் நகை, செல்போன்கள் திருடிய ஆசாமியை ரெயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. குளித்தலை அருகே வாகன சோதனை: தம்பதியிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
குளித்தலை அருகே நடந்த வாகன சோதனையில் தம்பதியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
4. திருச்சி விமான நிலையத்தில் 91½ பவுன் கடத்தல் நகை பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
5. தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகை திருட்டு
தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர், போலீசாரை கண்டதும் நகையை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை