மாவட்ட செய்திகள்

ரூ.45 கோடி சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் : 4 பேர் கைது + "||" + Shark fish fins seized: 4 people arrested

ரூ.45 கோடி சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் : 4 பேர் கைது

ரூ.45 கோடி சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் :
4 பேர் கைது
மும்பை, குஜராத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.45 கோடி மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

கடலில் இருந்து சுறா மீன்கள் துடுப்புகளுக்காக பிடிக்கப்படுகின்றன. சுறா மீன் துடுப்புகளுக்கு மருத்துவ குணம் மற்றும் பாலுணர்வை தூண்டும் தன்மை இருப்பதாக நம்பப்படுகிறது. சுறாக்களின் துடுப்பை கொண்டு தயாரிக்கப்படும் ருசிமிக்க சூப்பிற்கு விலை மிக அதிகம்.

இதற்காக சுறா மீன்களை உயிரோடு பிடித்து அவற்றின் துடுப்புகளை வெட்டியெடுத்து பிறகு அவற்றை மீண்டும் கடலுக்குள் எறிந்துவிடும் பழக்கம் இருக்கிறது. இவ்வாறு எறியப்படுகிற சுறா மீன்கள் நீந்தி செல்ல முடியாமல் பசியால் வாடி செத்து விடுகின்றன.

இதன் காரணமாக சுறா மீன்களின் துடுப்புகளை வைத்திருக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மும்பை சிவ்ரியில் உள்ள ஒரு குடோனில் அதிகளவில் சுறா மீன் துடுப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த குடோனில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, அங்கு சுறா மீன் துடுப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சுறா மீன் துடுப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக குடோன் உரிமையாளர் சிவ்ராமன், சராபத் அலி, அவரது சகோதரர் ஹமீத் சுல்தான், அகமது ஆசிக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையின் போது, அவர் குஜராத் மாநிலம் வெரவல் பகுதியில் உள்ள ஒரு குடோனிலும் சுறா மீன் துடுப்புகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று அந்த துடுப்புகளையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சுறா மீன் துடுப்புகள் 8 ஆயிரம் கிலோ இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.45 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுறா மீன் துடுப்புகளை கைதானவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 3 மணி நேரம் நடந்தது புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை; செல்போன்கள், கஞ்சா பறிமுதல்
புழல் சிறையில் போலீசார் 3 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
2. மிலாது நபியையொட்டி விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 1,668 மதுபாட்டில்கள் பறிமுதல்
மிலாது நபியையொட்டி விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட 1,668 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக சரக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
3. மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.3 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்
மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நோக்கி சென்ற காம்ருப் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மநபர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
4. திருச்சி விமான நிலையத்தில் அரியலூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் அரியலூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை பறிமுதல் செய்த படகுகளை மீட்காததால் ஐகோர்ட்டில் புதிய மனு அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்காததால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.