மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் பணம் பறித்த போலி பெண் போலீஸ் கைது + "||" + Police arrested the girl to a woman falsely claimed the money

பெண்ணிடம் பணம் பறித்த போலி பெண் போலீஸ் கைது

பெண்ணிடம் பணம் பறித்த போலி பெண் போலீஸ் கைது
தானே மும்ராவை சேர்ந்த 20 வயது பெண்ணை சம்பவத்தன்று அபர்னா (வயது 32) என்ற பெண் சந்தித்து பேசினார். அப்போது தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டார்.
தானே,

மும்ராவை சேர்ந்த அந்த பெண் மீது கல்யாண் போலீஸ் நிலையத்தில் திருட்டு, கடத்தல் வழக்கு இருப்பதாக கூறினார். மேலும் வழக்கு தொடர்பாக கைது செய்யாமல் இருக்க தனக்கு ரூ.7 லட்சம் தர வேண்டும் என மிரட்டினார். இதை கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், அந்த பெண் ரூ.1 லட்சம் மட்டும் தருவதாக கூறி முதல் கட்டமாக அபர்னாவிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தார். பின்னர் பெண் போலீஸ் அபர்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த பெண் இதுகுறித்து தானே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அபர்னா போலி பெண் போலீஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நவிமும்பை, ஸ்ரீவானே பகுதியில் வைத்து போலி பெண் போலீஸ் அபர்னாவை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கருங்கல் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை தொழிலாளி கைது
கருங்கல் அருகே முன்விரோதத்தில் முதியவரை கல்லால் அடித்துக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2. உடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி டிரைவர் கைது
உடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சாராயம் விற்ற பெண், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது
சாராயம் விற்ற பெண் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
5. சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் கட்டிட தொழிலாளி கைது
சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.