மாவட்ட செய்திகள்

சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் : பரமேஸ்வர் உத்தரவு + "||" + Those who do not pay the property tax must pay more fine

சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் : பரமேஸ்வர் உத்தரவு

சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் : பரமேஸ்வர் உத்தரவு
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி நிதித்துறை அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.

இதில் பரமேஸ்வர் பேசியதாவது:-

பெங்களூருவில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.1,614 கோடி சொத்துவரி வசூலாகியுள்ளது. இன்னும் வணிக கட்டிடங்களிடம் இருந்து அதிகமான வரி பாக்கியுள்ளது. இன்னும் ரூ.2,828 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டியுள்ளது. சொத்து வரி வசூலிக்க வருகிற மார்ச் மாதம் வரை காலஅவகாசம் உள்ளது.

அதற்குள் பாக்கி சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கி வரியை வசூலிப்பதில் சமரசத்திற்கு இடம் இல்லை. மண்டல அதிகாரிகள் வரியை வசூலிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சொத்துவரி செலுத்தா தவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும். சொத்து வரி வசூலிப்பதில் இந்த முறை புதிய சாதனை படைக்க வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

இதில் மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மின் மீட்டரில் தில்லுமுல்லு செய்து மின்சாரம் திருட்டு
செய்யாறு பகுதி கிராமத்தில் மின் திருட்டு தடுப்பு குழுவினர் நடத்திய ஆய்வில் மின்மீட்டரில் தில்லுமுல்லு செய்த மின்நுகர்வோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2. நன்னடத்தை அடிப்படையில் கர்நாடகத்தில் இதுவரை 1,334 கைதிகள் விடுதலை
நன்னடத்தை அடிப் படையில் கர்நாடகத்தில் இதுவரை 1,334 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
3. பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதம்
பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுவதாக மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.
4. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பரமேஸ்வர் இன்று ஆலோசனை
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பரமேஸ்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
5. இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
‘எந்திரன்’ படத்தின் கதை தொடர்பான வழக்கில், இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.