மாவட்ட செய்திகள்

5 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும்: மந்திரி சிவானந்த பட்டீல் பேச்சு + "||" + 5 crore people get medical treatment : Minister Sivananda Batil Talk

5 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும்: மந்திரி சிவானந்த பட்டீல் பேச்சு

5 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும்: மந்திரி சிவானந்த பட்டீல் பேச்சு
சுகாதார கர்நாடக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்று மந்திரி சிவானந்த பட்டீல் கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்த பட்டீல் கலந்து கொண்டு பேசியதாவது:-

சுகாதார கர்நாடக காப்பீட்டு திட்டத்தை போலவே மத்திய அரசின் ஆயுஸ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது. இந்த திட்டங்கள் பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. இந்த சுகாதார கர்நாடக காப்பீட்டு திட்டத்தில் 5 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தை சரிசெய்ய நாட்டில் பல்வேறு மருத்துவ திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகி ன்றன. தனியார் மருத்து வமனைக்கு இணையான மருத்துவ வசதிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் கிடைக்க வேண்டும். அந்த திசையில் அடுத்த 2 ஆண்டுகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதில் இன்னும் மேம்பட வேண்டும்.

மருத்துவ சேவைகளை சிறப்பான முறையில் செயல்படுத்த ஒவ்வொருவரும் ஈடுபாட்டு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் முதல் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரி வரை அனைவரும் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும்.

இந்த மருத்துவ திட்டங்கள் குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு சிவானந்த பட்டீல் கூறினார்.