மாவட்ட செய்திகள்

ரூ.50 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : நைஜீரிய வாலிபர் கைது + "||" + Rs 50 lakh drug confiscation: Nigerian youth arrested

ரூ.50 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : நைஜீரிய வாலிபர் கைது

ரூ.50 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : நைஜீரிய வாலிபர் கைது
மும்பை ஜோகேஸ்வரி சகாக்கர் ரோடு பகுதியில் போதைப்பொருள் விற்க ஒருவர் வரவுள்ளதாக அம்போலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மும்பை,

போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வெளிநாட்டு வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர் கொண்டுவந்த பையில் சோதனையிட்டனர்.

அப்போது அந்த பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. 472 கிராம் எடை கொண்ட அந்த போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

இதையடுத்து போலீசார் அந்த வெளிநாட்டு வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் நைஜீரிய நாட்டை சேர்ந்த பேமி ஒலிங்கியா (வயது29) என்பது தெரியவந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆடு மேய்க்கும் பெண்ணை பீர்பாட்டிலால் தாக்கிய 2 வாலிபர்கள் கைது
லாலாபேட்டை அருகே ஆடு மேய்க்கும் பெண்ணை பீர்பாட்டிலால் தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
2. குன்னம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 7 பேர் காயம் டிரைவர்கள் கைது
குன்னம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 7 பேர் காயமடைந்தனர். டிரைவர்கள் கைது செய்யப் பட்டனர்.
3. ‘கஜா’ புயல் சீரமைப்பு பணியில் தாமதம்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதம் தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது
புதுக்கோட்டையில் ‘கஜா‘ புயல் சீரமைப்பு பணி தாமதமாக நடைபெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது செய்யப்பட்டார்.
4. போலீஸ் நிலையத்தில் புகுந்து போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது
ஜெயங்கொண்டம் அருகே போலீஸ் நிலையத்தின் உள்ளே புகுந்து, போலீசாரை தாக்கிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சம் போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்
மும்பையில் வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சத்து 14 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நைஜீரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.