மாவட்ட செய்திகள்

தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து : பொருட்கள் எரிந்து நாசம் + "||" + A fire broke out in industrial area

தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து : பொருட்கள் எரிந்து நாசம்

தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து : பொருட்கள் எரிந்து நாசம்
மலாடு தொழிற்பேட்டையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.
மும்பை,

மலாடு, சோம்வாரி பஜார் அருகே பாம்பே டாக்கீஸ் தொழிற்பேட்டை பகுதி உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கடையில் நேற்று காலை 11.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதேபோல ஒரு ஆம்புலன்சும் அங்கு வந்தது.

இந்தநிலையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் கடைகள், குடோன்களில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
2. ஈகுவடார் நாட்டில் தீ விபத்தில் 18 பேர் பலி
ஈகுவடார் நாட்டில் நடந்த தீ விபத்தில் 18 பேர் பலியாயினர்.
3. பொள்ளாச்சி அருகே சமையல் எண்ணெய் குடோனில் தீ விபத்து
பொள்ளாச்சி அருகே சமையல் எண்ணெய் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் மேற்கூரை முற்றிலும் எரிந்து நாசமானது.
4. சிங்காநல்லூர் அருகே, ஏ.டி.எம். மையத்தில் தீ; 3 எந்திரங்கள் எரிந்து நாசம்
சிங்காநல்லூர் அருகே ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 எந்திரங்கள் எரிந்து நாசமானது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது.
5. மகாராஷ்டிராவில் துணி தொழிற்சாலையில் தீ விபத்து
மகாராஷ்டிராவில் பிவாண்டி பகுதியில் உள்ள துணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.