மாவட்ட செய்திகள்

சென்னையில் வாகன பிரேக் தயாரிப்பு ஆலை; சுவீடன் நிறுவனம் தீவிரம் + "||" + Vehicle brake production plant in Chennai

சென்னையில் வாகன பிரேக் தயாரிப்பு ஆலை; சுவீடன் நிறுவனம் தீவிரம்

சென்னையில் வாகன பிரேக் தயாரிப்பு ஆலை; சுவீடன் நிறுவனம் தீவிரம்
வாகனங்களுக்கான பிரேக்குகளைத் தயாரிக்கும் சுவீடனைச் சேர்ந்த பிரெம்போ நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு போஷ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான கே.பி.எக்ஸ். நிறுவனத்தை இந்நிறுவனம் வாங்கியது. அதோடு மகாராஷ்டிர மாநிலம் சக்கன் பகுதியில் ஒரு உற்பத்தி ஆலையையும் உருவாக்கியது. இது தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாகிறது. 10-ம் ஆண்டு நிறைவு விழாவில், இந்தியாவில் மேலும் ஒரு உற்பத்தி ஆலையையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி அந்த உற்பத்தி ஆலை, சென்னையில் நிறுவப்பட இருக் கிறது.

ரூ.72 கோடி முதலீட்டில் அமைய இருக்கும் இந்த ஆலையின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முழுமைப்பெற உள்ளது. இந்த புதிய ஆலையில் மோட்டார் சைக்கிள்களுக்கான டிஸ்க் பிரேக்குகள் தயாரிக்கப்பட உள்ளன. குறிப்பாக சி.பி.எஸ். மற்றும் ஏ.பி.எஸ். வகை பிரேக்குகளை தயாரிக்க உள்ளனர்.

அரசின் புதிய பாதுகாப்பு விதிகளின்படி, 125 சி.சி. திறனுக்குக் குறைந்த இரு சக்கர வாகனங்களில் ஒருங்கிணைந்த பிரேக் சிஸ்டம் (சி.பி.எஸ்.) கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதேபோல 125 சி.சி. திறனுக்கு மேற்பட்ட வாகனங்களில் ஏ.பி.எஸ். எனப்படும் பிரேக்குகள் கட்டாயமாக்கப்பட உள்ளன. இதை கருத்தில் கொண்டே இந்நிறுவனம், சென்னையில் உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது.