மாவட்ட செய்திகள்

கேமிங் லேப்டாப் + "||" + Gaming laptop

கேமிங் லேப்டாப்

கேமிங் லேப்டாப்
ஸ்மார்ட்போனிலேயே விளையாடுவதற்கான வசதிகள் வந்துவிட்டாலும் கேமிங்கிற்கென உள்ள லேப்டாப்பில் விளையாடுவது தனி அனுபவம்தான். இன்னும் சிலர் ஜாய் ஸ்டிக் உள்ளிட்டவற்றை வாங்கி வீட்டிலுள்ள டி.வி.யுடன் இணைத்து விளையாடி மகிழ்வதும் உண்டு.
ஜி.பி.டி. நிறுவனம் கையடக்கமான கேம்பேட் டேப்லெட் பி.சி.யை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பார்ப்பதற்கு ஒரு புத்தகம் போலவே இருக்கும். எடுத்துச் செல்வதும் எளிது. வெளியூர் பயணத்தின்போது குழந்தைகளின் பயணத்திற்கும் மிக்க தோழனாக இது நிச்சயம் இருக்கும்.

இதன் உயரம் 5 செ.மீ. அகலம் 45 செ.மீ. இதில் 5.5 அங்குல தொடு திரை உள்ளது. இதன் எடை 363 கிராம் மட்டுமே. இதில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதற்கு ஓராண்டு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.44,506 ஆகும்.

இது விண் டோஸ் 10 இயங்கு தளத்தில் செயல்படக் கூடியது. இன்டெல் ஆட்டோம் குவாட் கோர் பிராஸசர் உள்ளது.

கம்ப்யூட்டர் விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு இது மிகச் சிறந்த பரிசாக இருக்கும். ஆனால் விலைதான் வழக்கமான லேப்டாப் விலையில் உள்ளது.