மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே பிரெட் தயாரிக்கலாம் + "||" + Prepare bread at home

வீட்டிலேயே பிரெட் தயாரிக்கலாம்

வீட்டிலேயே பிரெட் தயாரிக்கலாம்
இப்பொழுது பிரெட் நமது அத்தியாவசிய உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.
பொதுவாக கடைகளிலிருந்துதான் பிரெட் வாங்க வேண்டியிருக்கிறது. நிறுவன பிரெட்டாக இருந்தால் அது பிரெஷ்ஷாக கிடைப்பதில்லை. உள்ளூர் ரொட்டிக் கடைகளில் தயாரிக்கப்படும் பிரெட்கள், உரிய சுகாதாரத்துடன் தயாரிக்கப்படுகிறதா என்பதற்கு உத்தரவாதமும் இல்லை. இந்நிலையில் வீட்டிலேயே பிரெட் தயாரிக்க உதவும் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது கென்ட்.

ஏற்கனவே சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான சுத்திகரிப்பான் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் இப்போது வீட்டிலேயே பிரெட் தயாரிக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் வீட்டிலேயே சுவை மிகுந்த, உடனடி உணவாக பிரெட்டை தயாரிக்கலாம். மேலும் கடைகளில் விற்கப்படும் பிரெட்களில் பிரசர்வேடிவ் எனப்படும் உணவை பாதுகாக்க உதவும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. வீட்டில் தயாரிப்பதன் மூலம் இதை முற்றிலுமாகத் தவிர்க்கலாம்.

இதில் வழக்கமான பிரெட் மட்டுமின்றி பழ கேக் உள்ளிட்டவையும் தயாரிக்க முடியும். கைகளால் மாவு பிசையும் அசவுகரியத்தையும் இது முற்றிலுமாக தவிர்த்துவிடுவதால் சுகாதாரமான, சுவை மிகு பிரெட்டை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

பிரெட் மாவு பிசைந்து அதற்கு புளிப்புச் சுவையூட்டி உங்களுக்கு சுகாதாரமான பிரெட்டை தயாரித்து அளிக்கிறது. பூரி, பரோட்டா, சப்பாத்தி உள்ளிட்டவற்றுக்கு மாவு பிசையவும் இது உதவுகிறது. என்ன தேவை என்பதை இதில் உள்ள மின்னணு பொத்தான்களை இயக்கி செயல்படுத்திக் கொள்ளலாம். மேலும் உங்களுக்கு எந்த வகையான பிரெட் வேண்டும், அதில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை சேர்த்து தயாரித்துக் கொள்ள முடியும். குளூடென் இல்லாத உலர் பருப்பு சேர்க்கப்பட்ட பிரெட்டையும் தயாரிக்க முடிகிறது.

இதில் மொத்தம் 19 வகையான மெனுக்கள் உள்ளன. பிரெட், பிரெஞ்ச் பிரெட், ஹோல் வீட் பிரெட், அரிசி பிரெட், குளூடென் இல்லாத பிரெட், பூரி, சப்பாத்தி, பரோட்டாவுக்கான மாவு பிசைதல், பீட்சாவுக்கான பேஸ் தயாரிப்பது உள்ளிட்டவற்றை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

ஆசிரியரின் தேர்வுகள்...