மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் + "||" + From Chennai Rounded with modern boxes Potikai Express

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன ரக பெட்டிகளுடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டை,

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன ரக பெட்டிகளுடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலை நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமின்றி கேரள மாநில மக்களும் அதிகம் நம்பி உள்ளனர். செங்கோட்டையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மட்டுமே தினமும் சென்னைக்கு இயக்கப்படுவதால் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் இந்த ரெயிலுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமம். முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படும். 108 பேர் பயணம் செய்யக்கூடிய முன்பதிவில்லா பெட்டிகளில் 200 பேர் பயணம் செய்யும் அவலநிலையும் உள்ளது.

இந்த நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் சிறப்பு அம்சங்கள் கொண்ட எல்.எச்.பி. நவீன பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. 23 நவீன எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. நேற்று காலை இந்த ரெயில் செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதில் ஏராளமான பயணிகள் வந்து இறங்கினார்கள்.

வரவேற்பு பெறும்

இதுகுறித்து ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், “ பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன வசதிகளுடன் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணத்தின் போது தண்டவாளத்தில் காணப்படும் அதிர்வுகள் மிக குறைவாகவே இருப்பதால் சுகமான பயணத்தை உணர முடிந்தது. பெட்டிகளில் விசாலமான ஜன்னல்கள், செல்போன் சார்ஜர் போடும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. நீண்ட தூரம் இயக்கப்படும் ரெயில்களில் மட்டுமே இந்த மாதிரியான நவீன பெட்டிகள் இணைக்கப்படும். ஆனால் தற்போது, தமிழகத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதால் நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம். இந்த ரெயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியை தருகிறது. இந்த ரெயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்“ என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாம்பன் தூக்குப்பாலம் பழுது: ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க பொதுமக்கள் வேண்டுகோள்
பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பழுதால் நிறுத்தப்பட்ட ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2. தமிழகத்தில் முதல் முறையாக கோவை ரெயில்நிலையம் முன் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம்
தமிழகத்தில் முதல் முறையாக கோவை ரெயில்நிலையம் முன் 100 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
3. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் 100 பேர் கைது
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொரடாச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. அம்ரிதா எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலுக்கு பதிலாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத புதிய ரெயில், கேரளாவுக்காக இயக்கப்படுகிறது
கேரள பயணிகளின் வசதிக்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்படாமல் தென்னக ரெயில்வேயில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் இணைப்பு ரெயிலுக்கு பதிலாக புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
5. பாம்பனில் புதிய ரெயில் பாலம் அமைக்க மண் ஆய்வு தொடங்கியது
புதிய ரெயில் பாலம் அமைக்க பாம்பனில் மண் ஆய்வு பணி தொடங்கியது.