மாவட்ட செய்திகள்

சென்னிமலை அருகே மேம்பால சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது; டிரைவர்கள் படுகாயம் + "||" + Lorry collapses in the side wall, Drivers are injured

சென்னிமலை அருகே மேம்பால சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது; டிரைவர்கள் படுகாயம்

சென்னிமலை அருகே மேம்பால சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது; டிரைவர்கள் படுகாயம்
ஈங்கூர் அருகே மேம்பால சுவரில் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.

சென்னிமலை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு நூல் கோன்கள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார். மாற்று டிரைவர் அய்யன்துரை (37) என்பவரும் இருந்தார்.

 இந்த லாரி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றுகொண்டு இருந்தது. குறுகிய ரெயில்வே மேம்பாலம் இருப்பது தெரியாமல் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த குமாருக்கும் அய்யன்துரைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்கள்.

 பக்கவாட்டு சுவரில் லாரி மோதியதால் லாரியின் முன் சக்கரங்கள் தனியே துண்டித்து விட்டன. அதனால் மாற்று லாரியில் லோடு ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.