மாவட்ட செய்திகள்

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு + "||" + Tomorrow mother planning camps tomorrow Collector Sandeepanjuri Announcement

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்களின் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

 தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்களின் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

அம்மா திட்ட முகாம்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி தாலுகாவில் கோரம்பள்ளம் பகுதி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முறப்பநாடு கோவில்பத்து கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் சேர்ந்தமங்கலம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் கருங்கடல் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் தோணுகால் கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் சங்கரலிங்கபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் ராஜாப்பட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஜெகவீரபாண்டியாபுரம் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் காமநாயக்கன்பட்டி கிராமத்திலும், ஏரல் தாலுகாவில் கீழ்பிடாகை கஸ்பா கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் முகாம் நடக்க உள்ளது.

கோரிக்கை விண்ணப்பங்கள்

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு– இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்பத்திரி-பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடங்களில் திரவ கிருமிநாசினி பயன் படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.
2. திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3. டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து வழக்கு: மதுரை கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை கலெக்டர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. கஜா புயல் எதிரொலி; தயார் நிலையில் பல்நோக்கு புகலிடம் - கலெக்டர் ஆய்வு
கஜா புயல் எதிரொலியாக பல்நோக்கு புகலிடம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. புயல் பாதிப்பை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.