மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் பட்டினி போராட்டம் + "||" + Nagarcoil Private School Teacher Officers Association hunger strike

நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் பட்டினி போராட்டம்

நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் பட்டினி போராட்டம்
உடனடியாக ஊதியம் வழங்க கோரி தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் நாகர்கோவிலில் நேற்று பட்டினி போராட்டம் நடத்தினார்கள்.
நாகர்கோவில்,

அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமனம் பெற்று கடந்த சில ஆண்டுகளாக ஊதியம் இன்றி பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிட தமிழக அரசையும், பள்ளி கல்வித்துறையையும் வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பட்டினி போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் சேவியர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சங்க பொதுச்செயலாளர் கனகராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

 தோழமை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் வாழ்த்தி பேசினர். முன்னாள் பொதுச்செயலாளர் இருதயதாசன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். சங்க மாவட்ட பொருளாளர் அஜின் நன்றி கூறினார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பட்டினி போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் வினோத், சிவஸ்ரீ ரமேஷ், ஆரோக்கிய டொமினிக் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 100 நாள் வேலை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது.
2. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
கரூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.
3. நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டம்: பயணத்தை பாதி வழியில் ரத்து செய்து விட்டு மு.க.ஸ்டாலின் சென்னை பயணம்
தஞ்சை அருகே நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணத்தை பாதி வழியில் ரத்து செய்துவிட்டு மு.க.ஸ்டாலின் சென்னைக்கு திரும்பி சென்றார்.
4. அமைச்சரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் கார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு
வேளாங்கண்ணி அருகே அமைச்சரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. பெலகாவியில் கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம்
சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி பெலகாவியில் கரும்பு விவசாயிகள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள்.